Thursday, May 9, 2024
Home » கிழக்கு, ஊவா, பொலன்னறுவையில் சிறிது மழை

கிழக்கு, ஊவா, பொலன்னறுவையில் சிறிது மழை

- சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை

by Rizwan Segu Mohideen
March 25, 2024 7:48 am 0 comment

– ஒரு சில இடங்களில் காலையிலும் மழை

இன்றையதினம் (25) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT