Thursday, May 9, 2024
Home » சீன மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைக்கு பூட்டு

சீன மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைக்கு பூட்டு

by Rizwan Segu Mohideen
March 21, 2024 11:36 am 0 comment

சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் சாதனை அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கும் சூழலில் அந்நாட்டின் பல மருத்துவமனைகள் இந்த ஆண்டில் மகப்பேறு சேவைகளை நிறுத்தியுள்ளன.

கிழக்கு செஜியாங் மற்றும் தெற்கு ஜியாங்சி உட்பட பல மாகாணங்களின் மருத்துவமனைகள் கடந்த இரண்டு மாதங்களில் தமது மகப்பேறு பிரிவுகளை மூடுவது தொடர்பில் அறிவித்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் மக்கள் தொகை வீழ்ச்சி வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இளம் தம்பதிகள் இடையே குழந்தை பிரசவத்தை ஊக்குவிப்பதற்கு அந்நாட்டு நிர்வாகம் கடுமையாக முயன்று வருகிறது.

சீனாவில் குறைந்த பிறப்பு வீதம் மற்றும் கொவிட் தொற்று காரணமாக மரணங்கள் அதிகரித்த சூழலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2023 இல் சீன மக்கள் தொகை வீழ்ச்சி கண்டதோடு இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிர்வாகம் அஞ்சுகிறது.

அண்மைய தரவுகளின்படி சீனாவில் மகப்பேற்று மருத்துவமனைகள் 2020 இல் 807 ஆக இருந்த நிலையில் அது 2021 இல் 793 ஆக குறைவடைந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT