Sunday, May 12, 2024
Home » நாணயத்தாள்களில் அலங்காரப் பொருட்கள் செய்ய தடை

நாணயத்தாள்களில் அலங்காரப் பொருட்கள் செய்ய தடை

- இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

by Prashahini
March 21, 2024 12:23 pm 0 comment

அண்மை காலங்களாக நாணயத்தாள்களில் அலங்காரப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் செய்து கொடுத்தல் போன்றன காணொளிகளாக சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமாகி வருகின்றன.

அலங்காரப்‌ பொருட்களை மற்றும்‌ அன்பளிப்புப்‌ பொருட்களை தயாரிப்பதற்கும்‌ சமூக வலைத்தளங்களுடாக அத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும்‌ நாணயத்‌ தாள்களை பயன்படுத்தும்‌ போக்கு காணப்படுவது இலங்கை மத்திய வங்கியின்‌ அவதானத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால்‌ வெளியிடப்பட்ட அனைத்து நாணயத்‌ தாள்களும்‌ குற்றிகளும்‌ ஏதேனும்‌ தொகையின்‌ கொடுப்பனவிற்காக இலங்கையில்‌ சட்ட ரீதியான நாணயமாக இருத்தல்‌ வேண்டும்‌.

2023ஆம்‌ ஆண்டின்‌ 16ஆம்‌ இலக்க இலங்கை மத்திய வங்கிச்‌ சட்டத்தின்‌ 55ஆம்‌ பிரிவின்‌ பிரகாரம்‌, இலங்கை மத்திய வங்கியின்‌ ஆளும்‌ சபையின்‌ அதிகாரமின்றி பின்வரும்‌ செயற்பாடுகளில்‌ ஏதேனுமொன்றை மேற்கொள்வதில்‌ ஈடுபட்டுள்ள எவரேனும்‌ ஆள்‌ தவறொன்றை புரிகின்றார்‌.

(ஆ) ஏதேனும்‌ நாணயத்‌ தாளை வெட்டுதல்‌, துளையிடுதல்‌ அல்லது எத்தகையதுமான வேறு எந்த வழியிலும்‌ உருச்சிதைத்தல்‌.

(ஆ) ஏதேனும்‌ நாணயத்‌ தாளின்‌ மேல்‌ எதனையும்‌ அச்சிடுதல்‌, முத்திரையிடுதல்‌ அல்லது வரைதல்‌ அல்லது ஏதேனும்‌ நாணயத்‌ தாளுக்கு அல்லது அதன்‌ மேல்‌ ஏதேனும்‌ இலச்சனையை அல்லது முத்திரையைப்‌ பொறித்தல்‌.

(இ) ஏதேனும்‌ நாணயத்‌ தாளுக்கு அல்லது அதன்மேல்‌ ஒரு விளம்பரம்‌ என்ற தன்மையிலான அல்லது வடிவத்திலான எதனையும்‌ இணைத்தல்‌ அல்லது பொறித்தல்‌.

(௩) ஏதேனும்‌ நாணயத்‌ தாளை எத்தகையதுமான ஏதேனும்‌ வடிவத்தில்‌ மீளத்‌ தயாரித்தல்‌ அல்லது அதன்‌ நேர்படியை ஆக்குதல்‌.

(௨) ஏதேனும்‌ நாணயத்‌ தாளை சட்டரீதியான நாணயமாகவல்லாது வேறு வகையாக பயன்படுத்தல்‌.

சட்டத்தின்‌ 111ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ இச்சட்டத்தின்‌ கீழ்‌ தவறொன்றைப்‌ புரிகின்ற எவரேனும்‌ ஆள்‌ நீதவான்‌ ஒருவர்‌ முன்னரான சுருக்கமுறையான விளக்கத்தின்‌ பின்னர்‌ குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதன்‌ மீது 25 மில்லியன்‌ ரூபாவை விஞ்சாத குற்றப்பணமொன்றுக்கு அல்லது மூன்றாண்டுகளை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு இருவகையில்‌ ஒரு வகையான மறியற்தண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம்‌, மறியற்தண்டனை ஆகிய இரண்டிற்கும்‌ ஆளாதலும்‌ வேண்டும்‌.

மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்திற்குப்‌ புறம்பான செயற்பாடுகளில்‌ ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை வலுவாக வலியுறுத்துகின்றது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT