Thursday, May 9, 2024
Home » பெண்களின் சுகாதாரப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு அவசியம்

பெண்களின் சுகாதாரப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு அவசியம்

by Prashahini
March 15, 2024 2:26 pm 0 comment

பெண்களின் ஆரோக்கியத் துவாய் மற்றும் அது தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக செலின் அறக்கட்டளை (Selyn Foundation) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14) ஏற்பாடு செய்திருந்த Bleed Good நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

இதன்போது 52% பெண்களின் ஆரோக்கியம் மீதான நம்பிக்கை இனியும் அற்றுப்போகாதிருக்கும் விதமாக நாம் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், இந்நாட்டில் பெண்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இருந்தது.

இதன் விளைவாக, இன்று செலின் அறக்கட்டளை சுகாதார வசதிகள் இல்லாத சுகாதார வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மிக முக்கியமானதொரு திட்டத்தை முன்வைத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் 2019 ஆம் ஆண்டு வாக்குறுதியளித்தபடி ஸ்கொட்லாந்து நியுசிலாந்து போல, நிதிப் பிரச்சினைகளால் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பெண்களுக்கு எமது அரசாங்கத்தின் ஊடாக இந்த சுகாதார உபகரணங்கள் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது ஒரு நலன்புரி மட்டுமல்ல, தேசிய உற்பத்தி சார்ந்து கவனம் செலுத்துவதன் மூலமும், இந்தத் உற்பத்தி தொழில்களை ஊக்குவிப்பதன் நோக்கங்களை இணைப்பதன் மூலமும், இது வருமானத்தை ஈட்டும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கும் மற்றும் பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் விடயமுமாகவும் நோக்க வேண்டும். இதன் மூலம் பெண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, தேவையற்ற சுகாதாரச் செலவுகளையும் குறைக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த சுகாதார பொருட்களை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பயன்படுத்தக்கூடிய முறையும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 52% பெண்களாக இருந்தாலும், ஆண்களை மையமாகக் கொண்ட சமூக கட்டமைப்பில் இதை நடைமுறைப்படுத்த முடியாமை வருத்தமளிக்கும் விடயமாகும். பெண்களின் இந்த உரிமை மீறப்படுவதையும் மறைக்கப்படுவதையும் இனியும் அனுமதிக்கக் கூடாது.

இன்று பெண்களின் ஆரோக்கியத் துவாய்களுக்கும் வரி விதிக்கும் நாடாக எமது நாடு மாறியுள்ளது.

ஆரோக்கியத் துவாய் பெண்களின் சுகாதார உரிமை மற்றும் நோய் தடுப்புக்கான ஏற்பாடு போலவே மறு பக்கம் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வாய்ப்புகளும் இதில் உள்ளடங்கியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நாம் வாக்குறுதியளித்தது போல நிச்சயமாக இந்த வேலைத்திட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT