Saturday, April 27, 2024
Home » கார் விபத்தில் சிக்கிய லஹிரு திரிமான்ன

கார் விபத்தில் சிக்கிய லஹிரு திரிமான்ன

by Prashahini
March 14, 2024 11:44 am 0 comment

முன்னாள்  இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் இன்று (14) காலை 7.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் – திறப்பனை வீதியில் 117 ஆம் இலக்க மைல்கல் அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் பயணித்த கார் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த லஹிரு திரிமான்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT