Thursday, May 9, 2024
Home » “மலையகம் 200” எனும் கௌரவிப்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு

“மலையகம் 200” எனும் கௌரவிப்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு

by Prashahini
March 11, 2024 2:01 pm 0 comment

இலங்கை – இந்திய நட்புறவு ஒன்றியம் “மலையகம் 200” எனும் கௌரவிப்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு கண்டி கெப்பட்டிபொல மண்டபத்தில் நேற்று (10) மாலை நடைபெற்றது.

இலங்கையின் தேசிய பத்திரிகையான லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி அனுசரணையில் இந்த கௌரவிப்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இலங்கை – இந்திய நட்புறவு ஒண்றிய தலைவரான தேசபந்து, தேச அபிமானி, தேசகீர்த்தி ஜனரன்ஞனஸ்ரீ எம்.தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலைஞர்கள்,சமூக சேவையாளர்கள்,ஊடகவியலாளர்கள்என பலர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் அதிதிகளாக தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் டி.செந்தில்வேலவர், மத்திய மாகாண முன்னால் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சிரேஸ்ட ஊடகவியலாளரும், அரச மொழிபெயர்ப்பாளருமான கே.ஈஸ்வரலிங்கம்(ஜே.பி), மத்திய மாகாணம் ஓய்வுபெற்ற பிரதி பொலிமா அதிபர் எட்வின் மகேந்திரா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

இதன்போது நிகழ்வில் மலையகம், வடக்கு,கிழக்கு என மாகாண ரீதியில் சமூகமளித்திருந்த ஊடகவியலாளர்களுக்கு “ஊடக செம்மல் 2024” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சமூக சேவை, கல்வி, கலைத்துறை உள்ளிட்ட பல துறைகளை சார்ந்தவர்களுக்கு “ஸ்ரீ விக்ரம கீர்த்தி” விருதும் கௌரவிப்பும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.ரமேஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT