Saturday, April 27, 2024
Home » தவக்கால சிந்தனை சிலுவையுடனான எமது பயணம்

தவக்கால சிந்தனை சிலுவையுடனான எமது பயணம்

by Gayan Abeykoon
February 15, 2024 9:03 am 0 comment

நாம் அவரைப் பின்பற்றுபவர்களாக இருக்க விரும்பினால் நம் நாளாந்தம் எமது சிலுவையினை எடுத்துக்கொள்ள வேண்டுமென்கிற அழைப்பினை இன்றைய நற்செய்தியில் இயேசு எமக்கு விடுக்கின்றார்.

இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் அவரவர் சிலுவை தனித்துவமானது., சிலுவைகள் வெவ்வேறுஅளவுகளிலும் வடிவத்திலும் வருகின்றன. சில கனமானவையாகவும் பெரியதாகவும் இருக்கின்றன. இன்னும் சில இலகுவானதாகவும்,சிறியதாகவும் இருக்கின்றன.

ஆயினும் எல்லாச் சிலுவைகளுக்கும் பொதுவானதாக ஒன்றுள்ளது. அவைதான்,அவை காயப்படுத்துகின்றன. அவை காயப்படுத்தினாலும், இயேசுவைப் பின்பற்ற நாம் விரும்பினால் நாம் அனைவரும் அதனைச் சுமந்து கொண்டுதான் அவரைப் பின்தொடரவேண்டும்.

ஆயினும் நாம் சுமக்கின்ற ஒவ்வொரு சிலுவையிலும் ஒரு வாக்குறுதி வருகிறது. அங்கே இயேசு கூறுவது யாதெனில் நாம் சிலுவையினை மாத்திரம் எடுத்துக் கொள்வதுடன் மட்டும் நின்றுவிடாது அவரது அடிச்சுவட்டினையும் பின்பற்றவேண்டும் என்றும் நாம் அவருடன் நெருக்கமாக இருக்கவேண்டுமென்றும் இயேசு நமக்கு நினைவூட்டுகின்றார்.

நாம் நமது கண்களைஅவரில் பதிக்கவேண்டும். சிலுவையினை சுமப்பது எவ்வளவு கடினமானது. அதனை விட்டு விடஎண்ணுகின்ற சூழ்நிலைகளும் நமக்கு எற்படும் என்பதனையும் இயேசு அறிவார். புரிந்துகொள்வார்.காரணம் அவரே பாரமான சிலுவையினைச் சுமந்தவர்.

இத் தவக்காலமதில்,உங்கள் தோள்களைஅழுத்துகின்ற சிலுவைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். உங்களது சிலுவைகளை அவரது சிலுவையுடன் ஒன்றிணையுங்கள். சிலுவைகள் நம்மைக் காயப்படுத்தலாம். மேலும் அவை கடினமானதாகவும் பாரமானதாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றை நாம் தனியாகச் சுமக்கவேண்டியதில்லை. நாம் ஒருவரையொருவர் நோக்கியும்  இயேசுவை நோக்கியும் அவரது அடிச்சுவட்டினை பிரமாணிக்கத்துடன் தொடர்ந்து பின்செல்வோம்.

-அருட்தந்தை நவாஜி…”

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT