Monday, April 29, 2024
Home » விமான நிலைய ஓய்வறை அணுகலை மேம்படுத்தும் கொமர்ஷல் வங்கி
பிரீமியம் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு

விமான நிலைய ஓய்வறை அணுகலை மேம்படுத்தும் கொமர்ஷல் வங்கி

by mahesh
February 7, 2024 6:30 am 0 comment

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியினால் வழங்கப்பட்ட பிரீமியம் பிரிவு கிரெடிட் கார்ட்களை வைத்திருப்பவர்களுக்கு விமான நிலைய ஓய்வறை அணுகலை மேம்படுத்துவதாக வங்கி அறிவித்துள்ளது.

வங்கியால் செயற்படுத்தப்படும் இந்த முயற்சியானது, கொமர்ஷல் வங்கி வீசா Infinite கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள விமான நிலைய ஓய்வறைகளில் வருடத்திற்கு நான்கு இதர விசேட சலுகையினை அனுபவிக்கலாம்.

அத்தோடு Visa Signature மற்றும் World Mastercard கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இரண்டு விசேட ஓய்வறை சலுகையினை பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள் எனவும் வங்கி அறிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் சில்லறை வங்கி மற்றும் சந்தைப்படுத்தல் பிரதிப் பொது முகாமையாளர் திரு. ஹஸ்ரத் முனசிங்க, “பிரீமியம் கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விமான நிலைய ஓய்வறை அணுகல் வழங்கப்படுவது வழக்கம்.

“கொமர்ஷல் வங்கியால் வழங்கப்பட்ட மூன்று வகை பிரீமியம் கார்ட்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் இந்த அணுகல் அதிகரிப்புடன், எங்களது கார்ட்களை வைத்திருப்பவர்களக்கு கிடைக்கும் கூடுதல் மதிப்பை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.” என்றார்.

விரிவாக்கப்பட்ட ஓய்வறை நன்மைகள் வாடிக்கையாளர் அனுபவத்தை அதிகரித்துள்ளதுடன். விசா மற்றும் மாஸ்டர் கார்ட் பிரீமியம் கார்ட்டுகளின் எல்லை தாண்டிய பயன்பாட்டை அதிகரிக்க,வங்கியின் பிரீமியம் அட்டைதாரர் பிரிவில் ஒட்டுமொத்த கிரெடிட் கார்ட் செலவினங்களை அதிகரிக்கவும், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் தக்கவைப்பை மேம்படுத்துதல் மற்றும் ComBank பிரீமியம் கார்டை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், போட்டித்தன்மையுடையதாகவும் மாற்றவும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT