Wednesday, May 1, 2024
Home » இசையமைப்பாளர் யுவன் இலங்கையில்

இசையமைப்பாளர் யுவன் இலங்கையில்

- பவதாரிணியின் மறைவின் பின் இசைநிகழ்ச்சி

by Prashahini
February 6, 2024 10:15 am 0 comment

யுவன் லோங் டிரைவ் (U1 LONG DRIVE) இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா கொழும்பை வந்தடைந்துள்ளார்.

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக நேற்று (05) அதிகாலை அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு சிஆர்&எப்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்வதற்காக யுவன்சங்கர் ராஜா இலங்கையை வந்தடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் யுவன் லோங் டிரைவ்வினுடைய முன்னாயத்த கலந்துரையாடல்கள் நேற்று மாலை கொழும்பு தாமரைக்கோபுர அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள யுவன் லோங் டிரைவ் நிகழ்ச்சியானது இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT