Home » இணையற்ற வாய்ப்புக்களை வழங்கும் Cinnamon Life Integrated Resort

இணையற்ற வாய்ப்புக்களை வழங்கும் Cinnamon Life Integrated Resort

by Gayan Abeykoon
May 1, 2024 5:41 am 0 comment

4.5 மில்லியன் சதுரஅடியைக் கொண்ட தொகுதி, பிரமிக்க வைக்கும் 30 மாடி கோபுரத்துடன் கூடிய இலங்கையின் முன்னணி கலப்புத் திட்டமான சினமன்ட் லைஃப்  தனது புதிய அலுவலக இடப்பரப்பின் ஊடாக வணிகங்கள் புதிய உயரத்தை அடைவதற்கான வாய்ப்பையும்,  அவற்றுக்குப் புதிய முகவரியையும் வழங்கவுள்ளது.

கொழும்பின் நிதி கேந்திரநிலையத்தின் மையப்பகுதியில் அதாவது கொழும்பு துறைமுக நகரத்துக்கும் பிரதான வீதிகளுக்கும் இடையில் அமைந்துள்ள சினமன்ட் லைஃப், கோப்ரேட் நிறுவனங்களுக்கு உயர்தர வாழ்க்கை முறையுடனான நவீன பணியிட வசதி, உணவு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள், சினமன்ட் லைஃப் ஹோட்டல்கள், கடைத்தொகுதிகள் மற்றும் குடியிருப்புக்களுடனான இடையறாத தொடர்புகளின் ஊடாக வணிகம், பொழுதுபோக்கு ஆகியவை ஒன்றாகக் கலந்த அனுபவத்தை வழங்கும்.

இந்த வணிகக் கோபுரத்தில் 24 மாடிகள் அலுவலக இடப்பரப்புக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், ஐந்து மாடிகள் வாகனத் தரிப்பிடத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளமும் 10,564 சதுரஅடியுடன் ஒப்பிடமுடியாத இடப்பரப்பைக் கொண்டமைந்திருப்பதுடன், பரந்துபட்ட வணிகங்களுக்கான தேவையை நிவர்த்தி செய்யக் கூடியதாகவும், அவற்றின் செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கு உகந்த சூழலையும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளன. இந்தக் கோபுரத்தின் ஒவ்வொரு தளத்திலும் அடுத்த தலைமுறைக்கான அலுவலக இடப்பரப்புக்கள், அடுத்த தலைமுறைக்கான தொழில்துறைக்கு முன்னேற இருக்கும் நிறுவனங்களுக்கு உறுதியளிப்பவையாக அமைகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT