Saturday, April 27, 2024
Home » ஆரம்பத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் தொழுநோயை குணப்படுத்திக் கொள்ளலாம்

ஆரம்பத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் தொழுநோயை குணப்படுத்திக் கொள்ளலாம்

by gayan
February 4, 2024 6:34 am 0 comment

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும், இந்நோயினால் பாதிப்புக்குள்ளாகி அவதியுறுவோரிடையே மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆறுதல்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் சர்வதேச ரீதியில் தொழுநோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலகில் ஆண்டு தோறும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் வருடமொன்றுக்கு 2000 பேர் பாதிப்பிற்குள்ளாகி வருவதாக தொற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளரான விஷேட வைத்திய நிபுணர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமூகத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தொழு நோய் ‘மைக்கிரோ பக்ரீரியம் லெப்ரோ’ எனும் பக்ரீரியாவினால் ஏற்படுத்தப்படும் ஒரு தொற்றுநோயாகும்.

சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில் கண்கள் மற்றும் கைகள் பாதிப்புள்ளாக கூடும். மூக்கு மற்றும் வாய் மூலம் இந்ந நோய் பரவக் கூடியது.

எனவே, நோய் அறியப்பட்டவுடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். சிறப்பு உடைகளை அணிவதுடன் பொதுமக்கள் அதிகம் சஞ்சரிக்கும் இடங்களுக்கு செல்வதனை கூடியவரையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வரலாற்றில் மிகப் பழங்காலந்தொட்டு இந்நோய் அறியப்பட்டிருந்தாலும் இன்றைய காலத்தில் நோய் பல தன்மைகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றது என்று சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை சிரேஷ்ட வைத்திய நிபுணர் டொக்டர் சனூஸ் காரியப்பர் தெரிவித்தார்.

(மாளிகைக்காடு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT