402
கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 145ஆவது கிரிக்கெட் சமருக்கான போட்டிகள் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
‘Battle of the Blues’ (நீலங்களுக்கிடையிலான சமர்) என அழைக்க்பபடும் இந்த கிரிக்கெட் தொடர்ப எதிர்வரும் 2024 மார்ச் 07 ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இப்போட்டியான கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 50 ஓவர்கள் கொண்ட ‘Mustangs Trophy’ கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.