Friday, May 10, 2024
Home » வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கலும் கோமாதா வழிபாடும்

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கலும் கோமாதா வழிபாடும்

by Prashahini
January 16, 2024 9:11 pm 0 comment

வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் பட்டிப் பொங்கல் நிகழ்வும் கோமாதா வழிபாடும் மிகவும் சிறப்பாக இன்று (16) இடம்பெற்றது.

குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சூரியபகவானுக்கு, விசேடபூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கோமாதா பூஜை நடைபெற்று அவற்றிற்கு மதிப்பளிக்கப்பட்டது. இதன்போது கோமாதாவுக்கு படையல் வைத்து மாலை அணிவித்து விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, தேசிய ஆக்கத்திறன் போட்டிகளில் திறன்களை வெளிப்படுத்திய ஸ்ரீ கருமாரியம்மன் அறநெறி மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றதுடன் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்ட்டது.

குறித்த நிகழ்வினை வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், கருமாரியம்மன் தேவஸ்தானம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு, சர்வதேச இந்து இளைஞர் பேரவை என்பன ஏற்பாடு செய்திருந்தன.

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT