Saturday, April 27, 2024
Home » இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான்

- 3 வகையான தொடர்களில் மோதல்

by Prashahini
January 10, 2024 11:13 am 0 comment

இந்தியாவுக்கு எதிரான T20 தொடருக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் அயர்லாந்துடன் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்று வகையான போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

முதலாவதாக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான், கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பெப்ரவரி 2 ஆம் திகதி தொடங்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடும்.

அதையடுத்து, பெப்ரவரி 09 ஆம் திகதி முதல் அடுத்தடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையுடன் ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை நடத்தும்.

பின்னர், பெப்ரவரி 17 ஆம் திகதி தம்புள்ளையில் இரு அணிகளுக்கும் இடையிலான T20 போட்டி தொடர் ஆரம்பமாகும்.

இலங்கை சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அங்கு அவர்கள் அயர்லாந்துடன் ஒரு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுவார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT