Thursday, May 9, 2024
Home » விளையாட்டு விருதுகள் 2024: முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது

விளையாட்டு விருதுகள் 2024: முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது

by Prashahini
January 10, 2024 10:52 am 0 comment

2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை பெறும் இந்திய விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கான வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருந்தது. ஷமி மட்டுமின்றி விளையாட்டின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 25 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (09) ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு கையால் இந்த விருது வழங்கும் விழா டில்லியில் நடைபெற்றது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2ஆவது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலிக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

இதற்கு முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் எம் எஸ் தோனி, கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், மிதாலி ராஜ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தற்போது இடம்பிடித்துள்ளார்.

இந்திய விளையாட்டு விருதுகள் 2023:

மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது

சிராக் சந்திரசேகர் ஷெட்டி – பேட்மிண்டன்
ராங்கி ரெட்டி சாத்விக் சாய்ராஜ் – பேட்மிண்டன்

அர்ஜூனா விருது

ஓஜஸ் பிரவின் தியோட்டலே – வில்வித்தை
அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)
முரளி ஸ்ரீசங்கர் (தடகளம்)
பருல் சவுத்ரி (தடகளம்)
முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)
ஆர் வைஷாலி (செஸ்)
முகமது ஷமி (கிரிக்கெட்)
அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)
திவ்யகிருதி சிங் (குதிரைச்சவாரி)
திக்ஷா தாகர் (கோல்ப்)
கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)
சுசீலா சானு (ஹாக்கி)
பவன் குமார் (கபடி)
ரிது நேகி (கபடி – மகளிர்)
நஸ்ரின் (கோ-கோ)
பிங்கி (புல்வெளி பவுல்ஸ்)
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கிசுடுதல்)
இஷா சிங் (துப்பாக்கிசுடுதல்)
ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)
அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)
சுனில் குமார் (மல்யுத்தம்)
ஆன்டிம் (மல்யுத்தம்)
நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு)
ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை)
இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்)
பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)

துரோணாச்சார்யா விருது 2023

லலித் குமார் – மல்யுத்தம்
ஆர்.பி.ரமேஷ் – செஸ்
மஹாவீர் பிரசாத் சைனி – பாரா தடகளம்
சிவேந்திர சிங் – ஹாக்கி
கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் – மல்லாகம்ப்
தயான் சந்த் விருது 2023

மஞ்சுஷா கன்வார் – பேட்மிண்டன்
வினீத் குமார் சர்மா – ஹாக்கி
கவிதா செல்வராஜ் – கபடி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT