Saturday, April 27, 2024
Home » அமெரிக்க – சீனா இடையிலான அறிவியல் உடன்படிக்கை புதுப்பிக்கப்படுமா?

அமெரிக்க – சீனா இடையிலான அறிவியல் உடன்படிக்கை புதுப்பிக்கப்படுமா?

- அமெரிக்க தூதுவர் விளக்கம்

by Rizwan Segu Mohideen
December 26, 2023 10:54 am 0 comment

பீஜிங்குடன் முக்கிய அறிவியல் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைப் புதுப்பித்தல் குறித்துப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் நவீனப்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், புதிய ஒப்பந்தத்திற்கான வாய்ப்புகள் நிச்சயமற்றதாக இருப்பதாகவும் சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்கா-சீனா என்பவற்றுக்கிடையில் 1979 ஆம் ஆண்டில் முதல் ஒப்பந்தம் இராஜதந்திர ரீதியில் அதிகாரப்பூர்வமாக நிறுவிய பின்னர் – அமெரிக்கவின் அறிவியல் மற்றும் வணிக சாதனைகளை சீனா திருடியதாக அமெரிக்க குற்றச்சாட்டியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் விரிசல் நிலை ஏற்பட்டது.

பீஜிங்குடன் வலுவூட்டப்பட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை ஆறு மாதங்களுக்கு நீடிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை, முயன்றது, ஓப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான தனது விருப்பத்தை அமெரிக்கா ஆர்வத்துடன் வெளிப்படுத்தியது.

“நான் புதிய (சீன) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரை சில வாரங்களுக்கு முன்பு பீஜிங்கில் சந்தித்தேன், அதை நீட்டிக்கலாமா வேண்டாமா, புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளலாமா, என்ன பிரச்சினைகள் இருக்கும் என்பது குறித்து அவர்களுடன் பேச்சு நடத்த இருக்கிறோம் என ” என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.

“இது நவீனமயமாக்கப்பட வேண்டும் என்ற எங்கள் எதிர்பார்ப்புகளை நாங்கள் முன் வைக்கிறோம்,அடுத்த சில மாதங்களில் பேச்சு ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், தொழில்துறை உளவு, கட்டாய தொழில்நுட்ப இடமாற்றங்கள் மற்றும் சீனாவின் இராணுவ நவீனமயமாக்கலைத் தூண்டக்கூடிய பிற தந்திரங்கள் பற்றிய விடயங்களை மேற்கோள் காட்டியுள்ள அமெரிக்க காங்கிரஸில் உள்ள சில குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் , அவை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சீனாவுடனான மூலோபாயப் போட்டியின் உச்சக்கட்டத்தில் அமெரிக்க கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்க குறைந்தபட்ச முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங்கும் நவம்பரில் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த உச்சிமாநாட்டில் இரு அரசாங்கங்களுக்கிடையேயான தொடர்பை முடுக்கிவிட ஒப்புக்கொண்டனர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இராஜதந்திர உறவுகள் அடிமட்ட நிலைக்குச் சென்றுள்ளதோடு இருநாடுகளும் புவிசார் அரசியல் போட்டியாளர்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. (ரொயிட்டர்ஸ்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT