Wednesday, October 9, 2024
Home » மின்சார சபை ஊழியர்களுக்கான எவ்வித கொடுப்பனவுகளும் இல்லை

மின்சார சபை ஊழியர்களுக்கான எவ்வித கொடுப்பனவுகளும் இல்லை

- 25% சம்பள அதிகரிப்பும் நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் பணிப்புரை

by Prashahini
December 20, 2023 4:47 pm 0 comment

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவு அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25% சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு ஊக்கத்தொகைகள், கொடுப்பனவுகள் மற்றும் அதிகாரிகள் வாடகைக்கு எடுத்த வாகனங்கள் மற்றும் வாடகையாக செலுத்தப்பட்ட பணம் குறித்த அறிக்கையை வழங்குமாறும் மின்சார சபைத் தலைவரிடம் அமைச்சர் கோரியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x