Sunday, April 28, 2024
Home » டெங்குநோய் பரவலை கட்டுப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்

டெங்குநோய் பரவலை கட்டுப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்

மருத்துவர் காதர்

by mahesh
December 13, 2023 12:40 pm 0 comment

அக்கரைப்பற்று பிரதேசத்தில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமென, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, மருத்துவர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.

தற்போது அக்கரைப்பற்றில் பருவ மழை பெய்து வருவதால், டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்தில் டெங்குக் காய்ச்சலால் அதிகளவானோர் இப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்டதால் முற்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அக்கரைப்பற்றிலுள்ள வீட்டு வளாகங்கள், பொது இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகாத வகையில் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT