Saturday, April 27, 2024
Home » அதி விசேட வர்த்தமானிகள் வெளியீடு

அதி விசேட வர்த்தமானிகள் வெளியீடு

- அமைச்சு செயலாளர்கள் தொடர்பில் நியமனம்

by Prashahini
November 24, 2023 3:46 pm 0 comment

இரண்டு அமைச்சு செயலாளர்கள் நியமனம் தொடர்பான இரண்டு அதி விசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக மாபா பத்திரணவும் சுகாதார அமைச்சின் செயலாளராக வைத்தியர் பாலித குணரத்ன மஹிபாலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று (23) இந்த அதிவிசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டன.

வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மாபா பத்திரண, நவம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை ஒரு மாத காலத்திற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக தனது புதிய பதவியில் பணியாற்றுவார் .

mapa

இதேவேளை, பாலித மஹிபால, நவம்பர் 20 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு சுகாதார அமைச்சின் செயலாளராக தனது புதிய பதவியில் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

paali

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT