பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தியத்தலாவை ஹப்புத்தளை இடையிலான புகையிரத பாதையில் பாரிய மண் சரிவு ஏற்பட்டதில் புகையிரத எஞ்சினுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப் பிரதேசத்தில் தொடரும் அடை மழை காரணமாக நேற்றுக் காலை கொழும்பிலிருந்து புறப்பட்ட உடரடமெனிக்ேக புகையிரதம் ஹப்புதளையிலிருந்து தியத்தலாவை நேக்கிச் சென்று கொண்டிருந்த வேளை திடீரென மண் சரிவு ஏற்பட்டு புகையிரதத்தில் விழுந்ததில் புகையிரதம் உடன் செயலிழந்ததாகவும் புரையிரத எஞ்சினுக்கு மேலும் கீழும் கற்பாறைகள் விழுந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த புகையிரதத் திணைக்களம் தியத்தலாவை இராணுவ பாதுகாப்புப் பிரிவின் உதவியுடன் புகையிரதத்தில் விழுந்த பாறைகளை அகற்றி வருகின்றனர்.
(படம் .ஊவா சுழற்சி நிருபர்)