566
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி விரத நிறைவுநாளின் சூரசம்ஹாரம் நிகழ்வு நேற்று முன்தினம் (18) மாலை இடம்பெற்றது.
மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக சுவாமி கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார்.
அதன்போது, யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறுமுகசுவாமியின் அருள்காட்சியை கண்டு களித்தனர்.
கோப்பாய் குறூப் நிருபர்
யாழ்.விசேட நிருபர்