Home » நிலைபேறான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பட்ஜட்

நிலைபேறான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பட்ஜட்

by damith
November 14, 2023 7:28 am 0 comment

ஜித்தா நகரில் கடந்த திங்கட்கிழமை மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் பூரண கண்காணிப்பிலும், ஏற்பாட்டிலும் பெண்களுக்கான மாபெரும் சர்வதேச இஸ்லாமிய மாநாடு ஒன்றினை சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பைஸல் இப்னு பர்ஹான் இப்னு அப்துல்லாஹ் ஆலு சுஊத் ஆரம்பித்து வைத்தார்.
சவூதி அரேபியாவின் வேலைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு 37 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதையும், பெண்களுடைய பங்களிப்பு சமூக மற்றும் பொருளாதார விவகாரங்களில் இன்றியமையாதது என்பதையும் வெளிவிவகார அமைச்சர் பைஸல் இப்னு பர்ஹான் இப்னு அப்துல்லாஹ் ஆலு சுஊத் தெரிவித்தார்கள்.
‘இஸ்லாத்தில் பெண்களின் உரிமை’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் இஸ்லாத்தில் பெண்களின் உரிமை, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற தவறான புரிதல் மற்றும் இஸ்லாம் பெண்களின் உரிமைகளில் எந்தவிதமான குறைபாடுகளையும் ஏற்படுத்தவில்லை போன்ற பல முக்கியமான விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது. ஐந்து அமர்வுகளை கொண்டு நடைபெற்று முடிந்த இம்மாநாட்டில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
1. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகளை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை அதிகரித்தல்.
2. கல்வித்துறையில் பெண்களுக்கான உரிமைகள் பூரணமாக வழங்கப்படல்.
3. பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை இல்லாதொளிக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை வழங்கல்.
4. பெண்களின் உரிமைகளை பேசக்கூடிய இப்படியான மாநாடுகள், நிகழ்வுகள் ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.
5. ஒரு இஸ்லாமிய குடும்பம் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெண்களுடைய பங்களிப்பின் அவசியம்.
6. ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் இருப்பதற்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல்.
7. பெண்களின் உரிமைகளை பேசக்கூடிய பாடங்களை பாடசாலை பாடத்திட்டத்தில் கொண்டுவருதல்.
8. பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
9. ஆண் பெண் இருபாலாரும் பணிபுரியும் துறைகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கான தீர்வுகளை கொண்டு வரல்.
10. சமூகத்திற்கான பெண்களின் பங்களிப்புகளுக்குத் தடையாக காணப்படும் பொருளாதார மற்றும் குடும்ப ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆலு சுஊத் அவர்களுக்கு தெரிவித்தார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT