ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஐபோன் 15 கைத்தொலைபேசி பற்றிக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.
சாதனத்தைப் பயன்படுத்தும்போதோ அதற்கு மின்னூட்டம் செய்யும்போதோ ஐபோன் மிகவும் சூடாகிவிடுவதாகப் பயனீட்டாளர்கள் சிலர் கூறினர்.
மின் விளையாட்டுகளை விளையாடும் போதோ மற்றவர்களிடம் தொலைபேசி அழைப்பு அல்லது பேஸ்டைம் காணொளி மூலமாகப் பேசும்போதோ அவ்வாறு ஏற்படுவதாகப் பயனீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.
கைத்தொலைபேசிகளில் உள்ள புதிய ஏ17 சில்லினால் பிரச்சினை ஏற்படுகிறதா என்ற கேள்வி வந்துள்ளது.
புதிய சாதனங்களைப் பயன்படுத்தும்போதும் குறிப்பிட்ட சில செயலிகளைப் பயன்படுத்தும்போதும் அவ்வாறு நேர்வது வழக்கம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.