Tuesday, May 21, 2024
Home » இலங்கையில் அதிக உடற்பருமனால் ஏற்படும் விளைவுகள்

இலங்கையில் அதிக உடற்பருமனால் ஏற்படும் விளைவுகள்

- எச்சரிக்கும் சுகாதார அமைச்சு

by Prashahini
May 10, 2024 4:16 pm 0 comment

இலங்கையில் 46 சதவீத பெண்களும், 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால எச்சரித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் விரிவுரையின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 89 சதவீதமான மரணங்கள் புற்றுநோய், இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுகின்றது.

இதில் பெரும்பாலான இலங்கையர்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

வருடாந்தம் சுமார் 60,000 இலங்கையர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கடந்த வருடம் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, தொற்றாத நோய்களுக்கு உடல் பருமன் ஒரு முக்கிய காரணியாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT