Tuesday, May 21, 2024
Home » ‘DIGIECON உலகளாவிய முதலீட்டு மாநாடு’ ஜூன் 25 ஜனாதிபதி தலைமையில் கொழும்பில்

‘DIGIECON உலகளாவிய முதலீட்டு மாநாடு’ ஜூன் 25 ஜனாதிபதி தலைமையில் கொழும்பில்

- தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு

by Rizwan Segu Mohideen
May 10, 2024 5:08 pm 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் DIGIECON-2023 திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் DIGIECON உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு – 2024 (DIGIECON Global Investment Summit) என்பது இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாகும் என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் மூலம் பல வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு பெற்றுக் கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் தகவல் தொழிநுட்ப துறையின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உயர் பங்களிப்பை வழங்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கும் “DIGIECON 2023″ திட்டத்துடன் இணைந்தாக இலங்கை தொழில்நுட்ப அமைச்சினால் நடத்தப்படும் DIGIECON உலகளாவிய முதலீட்டு மாநாடு குறித்து தெளிவுபடுத்தும் ஊடாக மாநாடு இன்று (10) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கூறியதாவது:

“DIGIECON-2023″ திட்டத்துடன் இணைந்ததாக நடைபெறவுள்ள DIGIECON உலகளாவிய முதலீட்டு மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு டிஜிட்டல் முதலீட்டு மாநாட்டை நடாத்துவதன் மூலம் இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள DIGIECON திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதன் மூலம் தகவல் தொழிநுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் தமது துறையில் முன்னேற சிறந்த வாய்ப்பு உள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் இலங்கையை சர்வதேச ரீதியில் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம். இதன்படி சர்வதேச சமூகம் இந்நாட்டில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டங்கள் மூலம் நமது நாட்டில் உள்ள விசேட திறமை கொண்ட இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்து பணவீக்கம் குறைந்துள்ளது. இதன்படி, இந்நாட்டில் முதலீடுகளுக்கு சிறந்த பின்னணி உருவாகியுள்ளது. எனவே, இந்த மாநாட்டின் மூலம் பல வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும். இது நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும்” என்றும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் டிஜிட்டல் பொருளாதார உதவி பிரதம அதிகாரி சசீந்திர சமரரத்ன,

“இவ்வாறான சர்வதேச மாநாட்டை நடத்துவதன் நோக்கம் நம் நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதுதான். மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் 850இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்நாட்டில் உள்ளன. சில இளைஞர்கள் ஏற்கனவே தங்கள் நிறுவனங்கள் மூலம் சர்வதேச ரீதியில் நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளனர். உலகின் முன்னணி நிறுவனங்களுடன் பணிபுரிபவர்கள் நம் நாட்டில் உள்ளனர். அந்த நிலை மேலும் வளர வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறை ஒரு பாரிய உலகளாவிய சந்தையாகும். எனவே, இந்த நாட்டிற்கு அதிக முதலீடுகளை கொண்டுவர வேண்டும். அந்த நோக்கத்திற்காக, இந்த மாநாட்டின் மூலம் இளைஞர் சமுதாயத்தை ஊக்குவிக்க எதிர்பார்க்கிறோம்.

முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய புது தொழில்கள் இந்த நாட்டில் உள்ளன. உலக அளவில் முதலீடுகளைப் பெறும் திறனும் எங்களிடம் உள்ளது. அதற்கு இந்த நாடு முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்ற அடித்தளம் அமைக்க வேண்டும். இதற்கான அரசின் பங்களிப்பும் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சு மட்டத்திலிருந்து தூதரகங்கள் வரையான நிறுவனங்கள் இதற்கான ஆதரவை வழங்கி வருகின்றன. மேலும், பல தனியார் நிறுவனங்களும் இதற்கு ஆதரவை வழங்குவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

இந்த நிகழ்வில், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்ம ஸ்ரீ குமாரதுங்க, MasterCard முகாமையாளர் (இலங்கை மற்றும் மாலைதீவு) சந்துன் ஹபுகொட, FITIS நிறுவனத் தலைவர் இந்திக்க டி சொய்சா, SLASSCOM நிறுவனத்தின் பிரதித் தலைவர் நிஷான் மெண்டிஸ், BCS நிறுவனத்தின் தலைவர் எலொன்சோ டோல் CSSL நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அஜந்தா அத்துகோரள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT