Thursday, May 9, 2024
Home » பாரிசவாத நோயாளர்களுக்கான டிஜிட்டல் இயந்திரம் அன்பளிப்பு

பாரிசவாத நோயாளர்களுக்கான டிஜிட்டல் இயந்திரம் அன்பளிப்பு

by Prashahini
September 18, 2023 10:44 am 0 comment

பாரிசவாத நோயாளியின் நிறையினை படுக்கையுடன் சேர்த்து அளவிடக்கூடிய டிஜிட்டல் இயந்திரம் ஒன்று கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரத்தை ,லண்டனில் வாழும் இலங்கையைச் சேர்ந்த லண்டன் “Elderly King George” வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர். காந்தா நிரஞ்சன் , 04 இலட்சம் ரூபா பெறுமதியான நிறை அளவிடும் இந் டிஜிட்டல் இயந்திரத்தை அன்பளிப்பு செய்தார்.

அத்துடன் பாரிசவாத நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்தின் அளவானது அவர்களின் நிறையினை கருத்தில் கொண்டே கொடுக்கப்படுகிறது.

எனவே, இதன் தேவை கருதி பாரிசவாத சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் என். இதயகுமாரின் வேண்டுகோளுக்கு இணங்க வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். இரா. முரளீஸ்வரனின் ஏற்பாட்டில் இவ்வியந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இக்கையளிப்பு நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஜே. மதன், பொது வைத்திய நிபுணர்களான டாக்டர் என். இதயகுமார் மற்றும் டாக்டர் எம்.என்எம். சுவைப், தாதிய பரிபாலகி திருமதி எல். சுஜேந்திரன், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் ரி. தேவஅருள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

காரைதீவு குறூப் நிருபர் சகா

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT