Thursday, May 9, 2024
Home » கண்டி எசல பெரஹராவிற்கு மின்சாரம் வழங்க ரூ. 1 கோடி 32 இலட்சம் மதிப்பீடு

கண்டி எசல பெரஹராவிற்கு மின்சாரம் வழங்க ரூ. 1 கோடி 32 இலட்சம் மதிப்பீடு

- செலுத்துமாறு மின்சார சபை அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
July 17, 2023 5:38 pm 0 comment

– ஜனாதிபதி, மின்சக்தி அமைச்சரிடம் நிவாரணம் கோரும் தலதா மாளிகை

கண்டி எசல பெரஹரா திருவிழாவின் போது மின்சாரம் வழங்குவதற்காக ரூபா ஒரு கோடியே 32 இலட்சத்து 90 ஆயிரம் (ரூ. 13,299,010) செலவாகுமென மதிப்பீடு செய்து, குறித்த தொகையை செலுத்துமாறு ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் 4 மகா தேவாலயங்களுக்கு மின்சார சபை அறிவித்துள்ளது.

கண்டி நகரம் இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளர் எச்.எஸ். பண்டாரவின் கையொப்பமிடப்பட்ட இது தொடர்பான கடிதம் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவருக்கும் சத்தரா மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரச விழாவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள கண்டி எசல பெரஹரா ஓகஸ்ட் 21 முதல் 31 வரை வீதி உலா வரவுள்ளது.

குறித்த ஊர்வலத்தின் போது, ​​ஸ்ரீ தலதா மாளிகை வளாகம், 4 தேவாலயங்கள், பெரஹர வீதி வலம் வரும் பிரதேசங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அவசியமான மேலதிக ஒளி வழங்குதல் பணிகள் மற்றும் ஏனைய மின் விநியோக பணிகளுக்காக இந்த செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மதிப்பீட்டிற்கு அமைய, ஸ்ரீ தலதா மாளிகை மூலம் ரூ. 3,412,479, நாத ஆலயத்தினால் ரூ. 1,122,145, விஷ்ணு ஆலயத்தினால் ரூ. 1,368,385, கதிர்காம தேவாலயத்தினால் ரூ. 1,102,705, பத்தினி தேவாலயத்தினால் ரூ. 1,102,705 செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி நகரின் ஊடாகச் பெரஹரா செல்லும் சகல வீதிகளிலும் ஒளி வழங்குவதற்காக மின்சார சபை ரூ. 4,441,273 செலவிட்டுள்ளதாகவும், மின்னுற்பத்திக்கான செலவு ரூ. 749,215 எனவும் சபையினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டில் காட்டப்பட்டுள்ளது.

இதன்படி பெரஹரவிற்கு மின்சாரம் வழங்குவதற்காக மின்சார சபையினால் மொத்தமாக ரூ. 13,200,010 செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து மதிப்பிடப்பட்ட தொகையை, பொது முகாமையாளர், இ.மி.ச. எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலை மூலம் செலுத்துமாறு மின்சார சவை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவ்வாறான மதிப்பீட்டைச் செய்து பணம் செலுத்துமாறு மின்சார சபை அறிவித்துள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதியும் மின்சக்தி அமைச்சரும் கவனம் செலுத்தி, நிவாரணம் வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக பஸ்நாயக்க நிலமேக்களின் சங்கத்தின் தலைவர் ஹேமந்த பண்டார தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT