பெற். கூட். சம்பவம்; SLPP மாநகர உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

பெற். கூட். சம்பவம்; SLPP மாநகர உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு

பெற். கூட். சம்பவம்; SLPP மாநகர உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு-SLPP Kulatissa Geeganage Re Remanded Till Jan 18

தெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியைச் சேர்ந்த கொழும்பு மாநகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகேவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (06) இரவு, வெல்லம்பிட்டிய, சேதவத்தையிலுள்ள அவரது வீட்டில் வைத்து, கொழும்பு குற்ற பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்ட அவருக்கு இன்று (11) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

இன்றையதினம் (11) சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 28 ஆம் திகதி அப்போதிருந்த பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கடமை நிமித்தமாக தெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்திற்குள் சென்றதை அடுத்து அமைதியற்ற நிலையை தோற்றுவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...