ரபஆ படுகொலை நிகழ்வு: எகிப்தில் 13 பேர் கைது | தினகரன்

ரபஆ படுகொலை நிகழ்வு: எகிப்தில் 13 பேர் கைது

ரபஆ படுகொலை என்று அழைக்கப்படும் நிகழ்வின் 5 ஆண்டு நிறைவை ஒட்டி ஆர்ப்பாட்டத்திற்கு தூண்டியதாக, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டில் எகிப்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெய்ரோ புறநகர் பகுதியில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ஆறு பேரில் மூவர் வழக்கில் சமுகம்தராத நிலையில் 10 முதல் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஏழு பேர் வடக்கு கெய்ரோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை தூண்ட கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ சதிப்புரட்சி மூலம் எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட பின் அவருக்கு ஆதரவாக முன்னேடுக்கப்பட்ட இரு ஆர்ப்பாட்டங்கள் 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி பாதுகாப்பு படையால் அகற்றப்பட்டது. இதன்போது பாதுகாப்பு படையினரால் 600க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட சம்பவமே ரபஆ படுகொலை என அழைக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...