Home » கட்டணம் செலுத்தும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு ஊவாவில் தடை
தரம் 01 முதல் 05 வரையிலான

கட்டணம் செலுத்தும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு ஊவாவில் தடை

by sachintha
November 23, 2023 7:24 am 0 comment

தரம் 01 முதல் 05 வரையான மாணவர்களிடமிருந்து கட்டணம் அறவிட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு, ஊவா மாகாணத்தில் தடை விதிக்கப்படவுள்ளது. ஊவா மாகாண கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால இதுபற்றி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கட்டணம் அறிவிடப்படுத் வகுப்புக்கள், பாடசாலை நேரத்துக்கு மேலதிகமாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் நடத்தப்படுகிறது. ஆசிரியர்களால் நடத்தப்படும்

இந்த பிரத்தியேக வகுப்புகள் குறித்தே இத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தடை நேற்று (22) முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவு செய்யப்படுவதில்லை.

இதனால், கட்டணம் அறவிட்டு மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு நடத்தப்படும் வகுப்புக்களிலே பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்னர்.

 

ஊவா சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT