இரு வாள்வெட்டு சம்பவங்களில் இரு இளைஞர்கள் காயம் | தினகரன்

இரு வாள்வெட்டு சம்பவங்களில் இரு இளைஞர்கள் காயம்

இரு வாள்வெட்டு சம்பவங்களில் இரு இளைஞர்கள் காயம்-Sword Attack-2 Youth Injured

யாழ். தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் நேற்று (10) இரவு நடாத்தப்பட்ட இருவேறு வாள்வெட்டுச் சம்பவங்களில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தெல்லிப்பழை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் வீடுபுகுந்து சரமாரியாக வாளால் வெட்டியதில் 19 வயதான இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீதியில் நின்றிருந்த இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத நபர்கள் துரத்திச் சென்று வாளால் வெட்டியதில் 21 வயதான இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறே இந்த வாள்வெட்டுச் சம்பவங்களுக்கான காரணமென பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

(செல்வநாயகம் ரவிசாந்)

 


Add new comment

Or log in with...