Saturday, April 27, 2024
Home » இனியநினைவுகளுடன் தாயகம் திரும்புகிறோம்

இனியநினைவுகளுடன் தாயகம் திரும்புகிறோம்

by sachintha
November 10, 2023 6:02 am 0 comment

தர்மப்பணி மேற்கொள்ள தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த சாய் சமர்ப்பனா ஜெ. என். ஜெகத் ராம்ஜி கருத்து

இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அன்பான உபசரிப்பில் மகிழ்ந்து இனியநினைவுகளுடன் தாயகம் திரும்புகிறோம் என்று மாத்தளை, நாவலபிட்டி, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வஸ்திரதானம் வழங்குவதற்காக இலங்கை வந்திருந்த சாய் சமர்ப்பனாசாரி டபிள் ட்ரஸ்ட் நிர்வாக இயக்குனரும், தமிழ்நாடு தொழிலதிபருமான ஜெ. என். ஜெகத் ராம்ஜி தாயகம் திரும்புவதற்குமுன்னர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டி.எஸ்.டி அறக்கட்டளை கே. சசிகுமார் தலைமையில் மஞ்சள் பயணம் பவுண்டேசன் சி. சரவணகுமார், சாய் சமர்ப்பனாசாரி டபிள் ட்ரஸ்ட் ஜெ. என். ஜெகத் ராம்ஜி தம்பதிகள், நாமக்கல் தலைமை சேவாடிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் அக்னிராஜேஷ், சர்வதேச விளையாட்டு வீரரும் சமூகசிந்தனையாளரும், எழுத்தாளருமான முனைவர் மா. ரா. சௌந்தரராஜன், தொழிலதிபர் நாமக்கல் செல்வராஜ், திருச்சி ராஜ், சக்ரவர்த்தி மற்றும் டொக்டர் நடராஜா லால்பகதூர் உட்பட இருபதுக்கு மேற்பட்டோர் இந்நிகழ்விற்காக தமிழ்நாட்டிலிருந்து விஜயம் செய்திருந்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வஸ்திரதானம் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

முனைவர் மா. ரா. சௌந்தரராஜன் கருத்துத்தெரிவிக்கையில், “முதல் தடவையாக தர்மப்பணிகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வந்திருந்த போது எமக்குப் பக்கபலமாக இருந்து, எமது பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிய வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளி ஆலய அறங்காவலர் பெரியசாமிசுந்தரலிங்கம், ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள், சிவாச்சாரியார்கள், ஆலய தொண்டர்கள் மற்றும் மாசித்தர்கள் அறக்கட்டளை, தமிழ்நாடு – இலங்கை நம்பிக்கை பொறுப்பாளர் எச்.எச்.விக்கிரமசிங்க ஆகியோருக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்புனித நிகழ்வை ஆரம்பித்து வைத்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணமாலை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கும் நன்றியை தெரிவிகின்றோம்” என்றார்.

மஞ்சள் பயணம் பவுண்டேசன் சி. சரவணகுமார் கருத்துத் தெரிவிக்கையில், “குறுகிய காலத்தில் நாம் மேற்கொண்ட பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து தாயகம் திரும்புகின்றோம். எமக்கு விசா வழங்க உறுதுணை புரிந்த இந்துசமய கலாசார அலுவல்கள் பணிப்பாளர் வை. அனிருத்ரன், புத்தசாசன மற்றும் கலாசாரஅலுவல்கள் மேலதிக செயலாளர் எச்.என்.குமாரி மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், மாமந்ரா அதிபர் லயன் எம்.மகேந்திரன் மற்றும் தினகரன், வீரகேசரி பத்திரிகைகளுக்கு நன்றிகள் கூற கடமைப்பட்டிருக்கின்றோம். இது எமதுஆரம்பம். மீண்டும் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்வோம். எமது உறவுகளோடு உறவாடவும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுமேஎமதுநோக்கமாகும்” என்றார். தலைமலை சேவா ட்ரஸ்ட் அக்னிராஜேஷ் கருத்துத் தெரிவிக்கையில், “எமது அடுத்த பணியை தமிழ்_ சிங்களப் புத்தாண்டின் (2024) போதுஆரம்பிப்பதோடு, மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்க இருக்கின்றோம். அரசு எமக்கு சுங்கத்தீர்வையை வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT