பாதாள குழு மோதல்: துப்பாக்கிச்சூடு; இருவர் பலி | தினகரன்

பாதாள குழு மோதல்: துப்பாக்கிச்சூடு; இருவர் பலி

(வைப்பக படம்)
 
இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இன்று (13) காலை 10.00 மணியளவில், நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவெல - மாலபை வீதியின், கொத்தலாவல சந்தியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்குக்கு உள்ளான இருவரும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
குறித்த சம்பவம், இரு பதாளா கோஷ்டிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் எதிரொலியாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிம் வெளியிட்டுள்ளனர்.
 
இதேவேளை குறித்த சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில், நுகேகொட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், விசேட பொலிஸ் குழு ஒன்றினால் விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
 

Add new comment

Or log in with...