கீத் நொயார் தாக்குதல்; மேலும் இரு கோப்ரல்கள் கைது | தினகரன்


கீத் நொயார் தாக்குதல்; மேலும் இரு கோப்ரல்கள் கைது

 
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (19) அதிகாலை மேலும் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இராணுவ கோப்ரல்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரையும், கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
 
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (18), இராணுவ மேஜர் இருவர் உள்ளிட்ட, மூன்று இராணுவ உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
கீத் நொயார், கடந்த 2008, மே மாதம்  கொழும்பில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தி நேஷன் (The Nation) பத்திரிகையின் பிரதி ஆசிரியரான கீத் நொயார், யுத்த கள செய்திகள் தொடர்பில் பத்திரிகையில் எழுதி வந்த ஊடகவியலாளராக செயற்பட்டு வந்தார்.
 
 

Add new comment

Or log in with...