Monday, May 6, 2024
Home » அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மாவின் பீ.எச். எக்செல்லன்ட் எவார்ட் விருது

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மாவின் பீ.எச். எக்செல்லன்ட் எவார்ட் விருது

by Gayan Abeykoon
April 24, 2024 9:33 am 0 comment

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்வி அபிவிருத்தி நிறுவனம் தமது நிறுவனத்தில் கல்வி பயின்று இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் 2021/ 2022 ஆம் ஆண்டுகளில் தெரிவான 115 மாணவர்களையும் தேசிய தொழில்நுட்ப உயர்தர டிப்ளோமா துறையில் திறமை காட்டிய 16 மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்த ‘எவார்ட் ஒப் எக்ஸ்செல்லன்ஸ்’_ 2024 (Award of Exellence 2024) வைபவம் அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரி அன்னை சாலிஹா மன்ற மண்டபத்தில் நடைபெற்றது

நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஹனிபா இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ எல்.எம் அதாஉல்லாஹ் கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினர்களாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஸ்-ஷேய்க் எ.எம்.ரகுமதுல்லாஹ், பிரதேச செயலாலளர் அஸ்-ஷேய்க் ரீஎம்.எம்.அன்சார், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளர் ஏ.ரீஎம் ராபீ, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.ரஜாப், உதவி பிரதேச செயலாளர் அஸ்ஷேய்க் ராசித் யகியா, பிரதி கல்விப் பணிப்பாளர்களான ஏ எஸ்.அகமத் கியாஸ், எம்.எம்,சித்தி பாத்திமா உட்பட பலர் விருந்தனர்களாக கலந்து கொண்டனர்..

‘உயிர்ப்பு’ எனும் பாராட்டு விழா மலரை விழாக்குழு உறுப்பினர்கள் ஏ ல் ஜுனைதீன் மற்றும் எம் எம்.யெக்கீன் ஆகியோர் பிரதம அதிதிக்கும் கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளுக்கும் வழங்கிவைத்தனர். பைத்துல் ஹிக்மாகல்வி அபிவிருத்தி நிறுவனம் தொடர்பான வளர்ச்சியை சித்தரிக்கும் ஆவண குறுந்திரைப்படம் ஓன்றை நிறுவனத்தின் போஷகர்களான பொறியியலாளர் எஸ்.எல்.எம். அலியார் மற்றும் எஸ்.ரியாஸ் ஆகியோர்வெளியிட்டு வைத்தனர்.

வைபவ இறுதியில் அமைப்பின் செயலாளர் ஏ எல். சுஹைப் நன்றியுரை வழங்கினார் .

கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன்  

அட்டாளைச்சேனை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT