Thursday, May 9, 2024
Home » சுதந்திர ஊடகவியலாளர்கள் சீனாவில் அழுத்தம் மற்றும் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்: அறிக்கை

சுதந்திர ஊடகவியலாளர்கள் சீனாவில் அழுத்தம் மற்றும் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்: அறிக்கை

by Rizwan Segu Mohideen
April 21, 2024 3:04 pm 0 comment

ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான வேலை நிலைமைகள் தொடர்பான 13 பக்க அறிக்கையொன்றை சீனா வெளிநாட்டு நிருபர்கள் சங்கம்(FCCC) வெளியிட்டுள்ளது. “முகமூடிகள் அகற்றப்படும், தடைகள் எஞ்சியுள்ளன” என்ற தலைப்பிலான இந்த அறிக்கை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் குறுக்கீடுகள் மற்றும் சிரமங்கள் பற்றி விவரித்துள்ளது.

அதன் பெரும்பான்மையான உறுப்பினர்கள் 2023 ஆம் ஆண்டிலிருந்து பணி நிலைமைகள் மேம்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். யாதீன அறிக்கையிடலுக்கான சவால்கள் தொடர்பில் பல நிருபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அறிக்கைக்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, தனிப்பட்ட முறையில் மற்றும் அதிநவீன டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் அதிக மிரட்டல் மற்றும் கண்காணிப்பு போன்ற சுயாதீன அறிக்கையிடலுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க தடைகள் நீடிக்கிறது.

பதிலளித்தவர்களில் குறைந்தது 54 சதவீதம் பேர் பொலிஸார் அல்லது பிற அதிகாரிகளால் ஒரு முறையாவது தடுக்கப்பட்டதாகவும், 45 சதவீதம் பேர் தெரியாத நபர்களால் ஒரு முறையாவது இடையூறுகளை எதிர்கொண்டதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

சீன அதிகாரிகள் “அரசியல் ரீதியாக உணர்திறன்” என்று கருதும் பகுதிகளில் நிருபர்கள் இவ்வாறு கையாளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், 2023 இல் சின்ஜியாங்கில் இருந்து அறிக்கையிட முயன்ற 85 சதவீத பத்திரிகையாளர்கள் பிரச்சினைகளை சந்தித்தனர்.

இருப்பினும், “உணர்திறன்” பகுதிகளின் வரையறை விரிவடைந்து வருவதாகத் தோன்றுகிறது.79 சதவீத பத்திரிகையாளர்கள் ரஷ்யாவின் எல்லையில் உள்ள பிராந்தியங்களிலும், 43 சதவீதம் பேர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அல்லது உள் மங்கோலியா போன்ற இன வேறுபாடுள்ள பிராந்தியங்களிலும் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் தலையிடவும் சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுதந்திர பத்திரிகையாளர்களைக் கண்காணிக்க இடைவிடாமல் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை அதிகாரிகள் பயன்படுத்தி வருவதாகவம் இந்த அறிக்கை கூறுகிறது. பத்திரிகையளார்களை கண்காணிக்க டுரோன்களைப் பயன்படுத்துவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் வாழ்ந்து கொண்டு வேலை செய்வதற்கும் ஊடகவியலாளர் விசாக்கள் மற்றும் வதிவிட அனுமதிகளைப் பாதுகாப்பதில் நிருபர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சிக்கல்களை அமெரிக்க ஊடகங்கள் கூடுதலாக எதிர்கொண்டுள்ளன.

அறிக்கைக்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, 82 சதவீதம் பேர் தங்களுக்கு வெளிநாட்டு ஊடகங்களுடன் பேச அனுமதி இல்லை அல்லது முன் அனுமதி தேவையில்லை என்று கூறிய ஆதாரங்களால் நேர்காணல்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர் உத்தியோகபூர்வ அழுத்தம் காரணமாக கடைசி நிமிடத்தில் நேர்காணல்களை ரத்து செய்யப்பட்டதாகவும் தங்கள் சீன சகாக்கள் ஒரு முறையாவது அழுத்தம், துன்புறுத்தல் அல்லது மிரட்டப்பட்டதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT