Home » கல்முனை பொதுச்சந்தையில் உணவுப் பரிசோதனை

கல்முனை பொதுச்சந்தையில் உணவுப் பரிசோதனை

- வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

by Rizwan Segu Mohideen
April 20, 2024 8:28 pm 0 comment

கல்முனை மாநகர பொதுச்சந்தையில் பாரியளவிலான உணவுப் பரிசோதனை இன்று (20) மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹிலா இ்ஸ்ஸடீன் பணிப்புரைக்கமைவாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம். பாறுாக், பொது சுகாதார பரிசோதகர்களான எம்.ஜுனைடீன், ஜே.எம். நிஜாமுடீன், ஐ.எல்.எம். இத்ரீஸ், எம். ரவிச்சந்திரன் ஆகியோர்களினால் பொது சந்தையில் உள்ள வர்த்தக நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் பொது சந்தை வர்த்தகர்களுக்கு சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதன்போது பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டதுடன் சுகாதாரத்திற்கு பொருத்தமற்ற முறையில் காணப்பட்ட வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி தெரிவித்தார்.

நூருல் ஹுதா உமர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT