Saturday, May 18, 2024
Home » இலங்கை மற்றுமொரு பேச்சுக்கு தயாரென நிதியமைச்சு அறிவிப்பு
கடன் மறுசீரமைப்பு குறித்து

இலங்கை மற்றுமொரு பேச்சுக்கு தயாரென நிதியமைச்சு அறிவிப்பு

விரைவில் லண்டனில் நடத்தப்படும் -இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

by mahesh
May 4, 2024 6:15 am 0 comment

கடன் மறுசீரமைப்புக்காக இறையாண்மை பத்திர பதிவுதாரர்களின் (The Sovereign Bondholders) தற்காலிக குழுப் பிரதிநிதிகளுடன் இலங்கை விரைவில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்துமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். லண்டனில் நடத்தப்படவுள்ள இந்த பேச்சுவார்த்தைக்கான சரியான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “12 பில்லியன் டொலருக்கும் அதிகமான கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச பத்திரதாரர்களின் முன்மொழிவை இலங்கை கடந்த மாதம் நிராகரித்தது.

முக்கியமான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மற்றும் இரண்டு வருட கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கான அதன் முயற்சிகளை இது தாமதப்படுத்தும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம், பங்கு பத்திரகாரர்களின் முன்மொழிவுகளுக்கு இணங்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

முன்னதாக பங்கு பத்திரகாரர்களின் முன்மொழிவுக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இல்லையென்று இலங்கையின் முக்கிய பொருளாதார நிபுணர் ஒருவரும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது” என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT