Saturday, May 18, 2024
Home » அவுஸ்திரேலிய பத்திரிகையாளரின் வீசா மறுப்புக் குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்கா கருத்து

அவுஸ்திரேலிய பத்திரிகையாளரின் வீசா மறுப்புக் குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்கா கருத்து

by Rizwan Segu Mohideen
May 4, 2024 6:01 am 0 comment

2024 இந்தியத் தேர்தலில் செய்தி சேகரிக்க தன்னை அனுமதிக்கவில்லை என்றும்,நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் அவனி டயஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய பத்திரிகையாளரின் குற்றச்சாட்டுகள் குறித்த பாகிஸ்தான் நிருபர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்கா , குறுகிய கால பயணிகளாகவோ அல்லது சர்வதேச ஊடகவியலாளராகவோ தமது நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பது தொடர்பில் அந்த நாடு தீர்மானிக்கிறது என்று கூறியது.

அவுஸ்திரேலிய பத்திரிகையாளர் அவானி டயஸுக்கு வீசா புதுப்பிக்க மறுக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், “இந்திய அரசு தனது சொந்த வீசா கொள்கையுடன் செயற்படலாம். அது தொடர்பில் நான் இங்கிருந்து கருத்து சொல்வது உகந்ததாக இருக்காது.”

ஜனநாயகத்தின் கட்டமைப்பில் சுதந்திர பத்திரிகையின் பங்கை படேல் மேலும் வலியுறுத்தினார்.

“பரவலாக, ஜனநாயகத்தின் கட்டமைப்பில் சுதந்திரமான பத்திரிகை வகிக்கும் ஒருங்கிணைந்த பங்கு பற்றி உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதனால் தான் இங்கு தொடர்ச்சியாக இவ்வாறான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள அதிகாரிகளை இது பற்றி பேசட்டும்,” என்று அவர் கூறினார்.

2024 மக்களவைத் தேர்தலில் செய்தி சேகரிக்க தன்னை அனுமதிக்கவில்லை என்றும், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் அவனி டயஸ் கூறியுள்ளார். இருப்பினும், அவரது கூற்றுக்கள் “தவறானவை. மற்றும் நகைப்புக்குரியவை” என்று இந்திய தரப்பு ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ABC) தெற்காசிய நிருபர் அவனி டயஸ், “தனது தொழில்முறை நோக்கங்களை” மேற்கொள்ளும் போது வீசா விதிகளை மீறியது கண்டறியப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், டயஸின் வேண்டுகோளின் பேரில், பொதுத் தேர்தலில் செய்தி சேகரிப்பதற்காக அவரது வீசா நீட்டிக்கப்படும் என்று இந்திய தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

மேலும், தேர்தல்களில் செய்தி திரட்ட அனுமதிக்கப்படவில்லை என்ற அவனி டயஸின் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என்று அந்த வட்டாரங்கள் வலியுறுத்தின. மேலும், சாவடிகளுக்கு வெளியே தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக செய்தி திரட்ட அனைத்து வீசா பெற்ற ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT