Home » நுவரெலியா – இராகலை பிரதேச தோட்டப்பகுதிகளுக்கு ஜீவன் விசேட கள விஜயம்

நுவரெலியா – இராகலை பிரதேச தோட்டப்பகுதிகளுக்கு ஜீவன் விசேட கள விஜயம்

- தோட்ட நிர்வாகம் - தொழிலாளர்கள் இடையில் பேச்சுவார்த்தை

by Prashahini
April 5, 2024 10:16 am 0 comment

நுவரெலியா – இராகலை பிரதேச தோட்டப்பகுதிகளுக்கு விசேட கள விஜயத்தை மேற்கொண்ட நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் அங்கு பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற இந்த கள விஜயத்தின் போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட காங்கிரஸின் பிரதி தவிசாளர் சிரேஸ்ட சட்டத்தரணி பி.இராஜதுரை, தேசிய அமைப்பாளர் எ.பி.சக்திவேல், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வேலு யோகராஜ் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், தோட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இதன் போது, இராகலை டெல்மார் தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் அத்தோட்ட நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிணக்குகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து இராகலைக்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் இராகலை இ.தொ.கா காரியாலயத்தில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

பின் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இராகலை மேற்பிரிவு மக்களுக்கு கட்டியமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் கந்தப்பளை பார்க் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்ட அமைச்சர் அங்கு உட்கட்டமைப்பு அபிவிருத்திகளின் குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அத்துடன் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான உட்கட்டமைப்பு குறைகளை தீர்க்க அபிவிருத்திகளை துரிதப்படுத்தி விரைவில் அவ்வீடுகளை பயனாளிகளுக்கு கையளிப்பது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT