Saturday, April 27, 2024
Home » இரண்டாவது டெஸ்டில் ஹதுருசிங்க இல்லை

இரண்டாவது டெஸ்டில் ஹதுருசிங்க இல்லை

by Gayan Abeykoon
March 29, 2024 10:57 am 0 comment

இலங்கைக்கு எதிராக நாளை (30) ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹதுருசிங்க தனிப்பட்ட காரணத்திற்காக அவூஸ்திரேலியாவுக்கு பயணிப்பதாலேயே அவருக்கு அணியுடன் இணைய முடியமால் போயிருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த டெஸ்ட் தொடரின் முக்கியமான தருணத்தில் அவர் இடம்பெறாததற்கான காரணம் குறிப்பிட்டு கூறப்படவில்லை.

அவர் அணியுடன் இல்லாத நிலையில் உதவிப் பயிற்சியாளர் நிக் போதாஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது தலைமை பயிற்சியாளர் பதவிக்கான பொறுப்பை வகிக்கவூள்ளார். எனினும் ஹதுருசிங்கவின் தனிப்பட்ட விவகாரம் தொடர்பான ரகசியத்தை காக்கும்படி அனைத்து தரப்பினரையூம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கேட்டுள்ளது.

பங்களாதேஷ் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 328 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்ததோடு இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ஓட்டங்களை பெறத் தவறியது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெறாத பட்சத்தில் அந்த அணி தொடரை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT