Saturday, April 27, 2024
Home » யாழில். ஊடகவியலாளர் என கூறி 43 இலட்சம் ரூபாய் மோசடி

யாழில். ஊடகவியலாளர் என கூறி 43 இலட்சம் ரூபாய் மோசடி

- கனடா செல்லும் ஆசையால் நேர்ந்த சம்பவம்

by Prashahini
March 25, 2024 12:06 pm 0 comment

தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் , அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்து செல்ல உள்ளதாகவும் கூறி , அவ்வாறு அழைத்து செல்லப்படவுள்ள ஊடகவியலாளர்களுடன் ஊடகவியலாளராக உங்களையும் அழைத்து சென்று கனடாவில் இறக்கி விடுவதாக யாழ்ப்பாண இளைஞன் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அதற்காக சிலருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும் , ஊடக நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஊடகவியலாளர் என அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள , அந்நிறுவனத்திற்கு ஒரு தொகை பணம் வழங்க வேண்டும் என இளைஞனிடம் இருந்து 43 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்று, இளைஞனுக்கு ஊடக நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டையையும் வழங்கியுள்ளார்.

பணத்தினை பெற்று நீண்ட காலமாகியும் , கனடாவில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறுவதாக இளைஞன் அறியாத நிலையில் , தனது பணத்தினை மீள தருமாறு கோரிய வேளை , இளைஞனின் தொடர்பை துண்டித்துள்ளார்.

அதனால் இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , சந்தேகநபர் வவுனியாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதேவேளை , இளைஞனுக்கு வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அந்த ஊடக நிறுவனத்தினை , மோசடி செய்த நபரே நடாத்தி வந்தார் என தெரிய வந்துள்ளது.

பொலிஸாரின் தீவிர விசாரணைகளை அடுத்து , தலைமறைவாகி இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , குறித்த நபர் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT