Sunday, April 28, 2024
Home » வெஸ்லி கல்லூரியின் 150 வது ஆண்டு விழா

வெஸ்லி கல்லூரியின் 150 வது ஆண்டு விழா

by mahesh
March 13, 2024 8:00 am 0 comment

கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் (11) நடைபெற்ற வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். நாட்டுக்குத் தேவையான பிரஜைகளை உருவாக்குவதற்கு வெஸ்லி கல்லூரி முன்னோடிச் சேவையாற்றியுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக இதன்போது நன்றி கூறினார். கொழும்பு வெஸ்லி கல்லூரி 1874 ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் போது மெதடிஸ்ட் மிஷனரி கல்வி முறையின் கீழ் நிறுவப்பட்டது. இக்கல்லூரி இலங்கையின் சுதந்திரப் போரின் முன்னோடிகள், ஆளுநர்கள், ஜெனரல்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கைக்குச் சேவையாற்றிய பல முக்கியஸ்தர்களை உருவாக்கியிருந்தது.

இந்த நிகழ்வில் “செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் எதிர்கால கற்பித்தல் முறைமை” என்ற தலைப்பில் கல்லூரியின் பழைய மாணவரும் ஐக்கிய அமெரிக்காவின் சென் டியோக் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஆர்.சோமநாதன் சிறப்புரை ஆற்றினார்.

எல்ஸ்டன் கொக், லெனரோல் சசோரர்கள் உள்ளிட்ட பிரசித்தமான பாடகர்களின் நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இந்த ஆண்டுப் பூர்த்தி விழாவிற்கு ஜனாதிபதியின் வருகையை அடையாளப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விசேட நினைவு பரிசொன்றும் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு வௌியிடப்பட்ட சஞ்சிகையொன்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டன.

இலங்கை்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகள் பெட்ரிக், இலங்கை மெதடிஸ்ட் திருச்சபையின் பிரதம பாதிரியார் எபினேசர் ஜோசப், பிரித்தானிய மெதடிஸ்ட் தேவாலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பார்பரா ஈஸ்டன் அமையார் மற்றும் மார்ட்டின் ஈஸ்டன் கிரேட், மெதடிஸ்ட், ஆங்கிலிகன் மற்றும் பாப்டிஸ்ட் தேவாலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதகுருமார்கள் உட்பட மதகுருமார்கள், வண. பெர்ரி ப்ரோஹியர் உள்ளிட்ட வெஸ்லி கல்லூரியின் நிர்வாகிகள், வெஸ்லி கல்லூரி அதிபர் அவந்த பெர்னாண்டோ,ஜேர்மனிய வர்த்தகரும் அரசியல்வாதியுமான இயன் கரன் மற்றும் அவரது பாரியார், பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத் தலைவர் கெப்டன் நவீன் டி சில்வா உட்பட பழைய மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT