Thursday, May 9, 2024
Home » 16 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் சொத்துள்ள உலகின் முதல் செல்வந்தர்

16 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் சொத்துள்ள உலகின் முதல் செல்வந்தர்

டாங் வம்சத்தை சேர்ந்த பேரரசி வூ

by mahesh
March 13, 2024 7:45 am 0 comment

கோடீஸ்வரர்கள் அல்லது பெரும் பணக்காரர்கள் என்றாலே, ​​எலான் மஸ்க், அர்னால்ட் பெர்னால்ட், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இந்தியாவின் பணக்காரர் முகேஷ் அம்பானி ஆகியோரி பெயர்களே நினைவுக்கு வருகின்றன. ஆனால் வரலாற்றை புரட்டி பார்த்தால் மேலே குறிப்பிடப்பட்டவர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களை விடவும் அதிகமான சொத்துக்களை கொண்ட உலகின் பெரும்பணக்கார பெண்ணாக திகழ்ந்திருக்கிறார் சீனாவின் பேரரசி வூ.

வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் படி பேரரசி வூ, தாம், வாழ்ந்த சகாப்தத்தின் பணக்காரப் பெண்ணாக கருதப்படுகிறார். சில வரலாற்றாசிரியர்கள் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் பணக்காரப் பெண் என்றால், வூதான் என்று குறிப்பிடுகின்றனர்..

பேரரசி வூ-வின் மொத்த சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், முகேஷ் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை சேர்த்தாலும் பேரரசி வூ வின் சொத்துக்கு நிகராகப்போவதில்லை. அதாவது எலான் மஸ்கின் 229 பில்லியன் அமெரிக்க டொலர்கள், ஜெஃப் பெசோஸ் 174 பில்லியன் டொலர்கள் மற்றும் சுமார் 106.2 பில்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள முகேஷ் அம்பானி ஆகியோரின் சொத்துமதிப்பை முறியடித்துள்ளது .

டாங் வம்சத்தைச் சேர்ந்த பேரரசி வூ, ஒரு புத்திசாலி ஆட்சியாளர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தனது ஆட்சி மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளை இவர், கையாண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது பதவியைப் பாதுகாக்க தனது சொந்த குழந்தைகளை நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை பேரரசிவூ மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பேரரசி வூ ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்த காலக்கட்டத்தில் சீனப் பேரரசு மத்திய ஆசியாவில் விரிவடைந்தது. அவரது ஆட்சியின் கீழ், சீனப் பொருளாதாரம் செழித்த வளர்ந்ததுடன், தேயிலை மற்றும் பட்டு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சியைக் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT