Sunday, May 12, 2024
Home » மகளிர்தினத்தை 1000 பெண்சாரதிகள்கொண்ட வலையமைப்புடன் கொண்டாடிய Pick Me

மகளிர்தினத்தை 1000 பெண்சாரதிகள்கொண்ட வலையமைப்புடன் கொண்டாடிய Pick Me

by mahesh
March 13, 2024 8:00 am 0 comment

2023இல் தங்கள் தளத்தில் பெண்களின் ஈடுபாடு இரட்டிப்பாகியுள்ளதுடன் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக Pick Me நிறுவனம் தெரிவிக்கின்றது.

சவாரிகளை தவிர்த்து நிறுவனம், பெண் தொழில்முனைவோருக்கு Pick Me உணவு மற்றும் சந்தைத் தளத்தில் வாய்ப்புக்களை வழங்குகிறது. இதில் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட பெண் வணிகர்கள் இணைந்துள்ளனர்.

மாறி வரும் தொழில் துறை சூழல் வழங்கும் நெகிழ்வுத் தன்மையான வேலை நேரங்கள் தமது வலையமைப்புடன் பெண்கள் இணைவதில் முக்கிய காரணியாக இருப்பதாக PickMe தெரிவிக்கின்றது.

2024ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினம் குறித்துப் பேசுகையில், Pick Meஇன் நிறுவனர்/தலைமை நிர்வாக அதிகாரியான ஜிப்ரி ஸுல்பர், “பெண்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான பொதுவான வழிமுறைகளைத் தாண்டி, குறிப்பாக இக்கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு, மிகவும் அர்த்தமுள்ள வழிகளைத் தேடிக் கண்டறிவதில் நிறுவனம் ஆர்வமாக உள்ளது.” என்றார்.

அதிகமான மக்கள் தங்கள் வாகனங்களை வீட்டிலேயே விட்டுவிட்டு சவாரி சேவைகளின் மதிப்பையறிந்து பயன்படுத்துவதால் Pick Me அவர்களின் தினசரி அசைவு எண்ணிக்கையை ஒரு மில்லியன் வரை கொண்டு செல்ல முடியும் என கருதுகிறது. “இதனால் போக்குவரத்துத் தீர்வுகளுக்காக எங்கள் தளத்தைப் பயன்படுத்துபவர்களின் குறித்த தேவைகளை ஆதரிப்பதற்காக எங்கள் செயலியில் புதிய சேவைகளை விரைவில் ஆரம்பிக்க எண்ணியுள்ளோம். மேலும் பெண் சாரதிகள், சவாரித் தளத்தில் அவர்களுக்கென பிரத்தியேக ஆதரவுத் திட்டங்களை விரைவில் பெறுவார்கள்.” என்றார்.

இந்த எண்ணக்கருவுடன் PickMe, இலங்கை சமூகப் பொலிஸ் பிரிவுடன் இணைந்து 2024ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT