Thursday, May 9, 2024
Home » சேவைக் கட்டணத்தை அறிமுகப்படுத்தும் Uber Eats

சேவைக் கட்டணத்தை அறிமுகப்படுத்தும் Uber Eats

by Rizwan Segu Mohideen
March 12, 2024 3:53 pm 0 comment

Uber Eats Sri Lanka, தனது பிரபலமான உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் செயலியின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற ஆர்டர்களுக்கு சேவைக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பெப்ரவரி 29 முதல், நம்பகமான மற்றும் திறன்மிக்க உணவு விநியோக சேவையை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட, கட்டணங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பை வாடிக்கையாளர்கள் அவதானிக்க முடியும்.

Uber Eats செயலியின் மூலமாக ஆர்டர் செய்யும் போது, வாடிக்கையாளர்கள் விநியோகம் மற்றும் சேவைக் கட்டணம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய விநியோக கட்டணங்களைச் செலுத்துவார்கள். சேவைக் கட்டணத்தின் பாகமானது ஆர்டர் ஒன்றின் மதிப்பில் 5% க்கு சமமான தொகையாக இருக்கும் என்பதுடன், ரூபா 25 முதல் ரூபா 125 வரை அமைந்திருக்கும். மேலும் ஆர்டரை உறுதிப்படுத்தும் முன் வாடிக்கையாளர்கள் அதனை நிறைவு செய்து முடிவுறுத்தும் போது அவர்களுக்கு இந்த கட்டணம் புலப்படும். இந்த சேவைக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவது உணவு மற்றும் மளிகைப்பொருட்களுக்கான ஆர்டர்கள் இரண்டிற்கும் குறைந்த சராசரி தொகை கொண்ட விநியோக கட்டணத்திற்கு ஒத்ததாக இருக்கும். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறிய தொகை கொண்ட ஆர்டர் கட்டணம் இனி வசூலிக்கப்படாது.

இதன் விளைவாக, Uber One உறுப்பினர்கள் அல்லாதவர்கள், உணவு அல்லது மளிகைப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும்போது குறைந்த சராசரி விநியோக கட்டணத்தை உள்ளடக்கிய அதே அளவிலான விநியோக கட்டணங்களைச் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் அவர்கள் ஆர்டரை நிறைவுசெய்யும் தருணத்தின் போது கூடுதல் சேவைக் கட்டணத்தை அவர்களால் அவதானிக்க முடியும்.

Uber One உறுப்பினர்களுக்கு இதனால் எவ்விதமான பாதிப்பும் கிடையாது. உணவு மற்றும் மளிகை ஆர்டர்களின் போது முறையே ரூபா 900+ மற்றும் ரூபா 1200+ ஆர்டர்களுடன் Uber One முத்திரையிடப்பட்ட வணிகர்களிடம் இருந்து பிரத்தியேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தொடர்ந்து அனுபவிக்கிறார்கள். தகுதியான ஆர்டர்களுக்கு 0 விநியோக கட்டணத்திற்கு மேலதிகமாக, எவ்விதமான சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT