Sunday, May 19, 2024
Home » Printcare Agile இன் “Book Wonders”
புத்தகங்களுக்கு உறையிடும் பெற்றோரின் கவலையை போக்கும்

Printcare Agile இன் “Book Wonders”

by mahesh
May 8, 2024 6:30 am 0 comment

Printcare Digital Solutions (Pvt) Limited ஆனது, வேலைப் பளு மிக்க பெற்றோர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால்களில் ஒன்றான, தங்களது பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்களுக்கு உறை இடும் ஒரு புதிய தீர்வை, Printcare Agile எனும் வர்த்தக நாமத்தின் கீழ் அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. “Book Wonders” எனும் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தாக்கமான தயாரிப்பானது, வழக்கமாக புத்தகங்களுக்கு உறை இடும் செயன்முறையை விரைவாகவும், எளிதாகவும், திறமையாகவும் மாற்றுவதை உறுதியளிக்கிறது.

பாடசாலை புத்தகங்களுக்கு உறையிடும் செயன்முறையானது, நீண்ட காலமாக பெற்றோருக்கு நேரத்தை எடுத்துக் கொள்கின்றதும் சிக்கலானதுமான பணியாகும். உறை இடும் காகிதங்களை கொள்வனது செய்வது முதல் அளவாக வெட்டி, மாணவர்களின் பெயர் விபரங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டுதல், பாதுகாப்பிற்காக பொலித்தீன் உறை போடுதல் வரை, முழுச் செயன்முறையும் சோர்வானதாகவும் திறனற்றதாகவும் இருக்கும். அது மாத்திரமன்றி, சில பாடசாலைகள் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு வர்ண்ணத்திலும் அமைய வேண்டுமென்பது கட்டாயம் என்பதோடு, பெற்றோர்கள் அவற்றை தேடுவதிலும் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அத்துடன் காகிதங்களையும் வளங்களையும் தேவையில்லாமல் வீணாக்கவும் செய்கிறார்கள்.

Printcare Agile ஆனது, இந்த கவலைகளை உணர்ந்து, Book Wonders மூலம் ஒரு விரிவான தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தனித்துவமான தயாரிப்பானது, பாடசாலை இலச்சினை, பாடங்களின் நிறங்கள், மாணவர் பெயர், தரம், மாணவரின் புகைப்படம் உள்ளிட்ட மாணவர்களின் அத்தியாவசியமான விபரங்களை முன்கூட்டியே அச்சிடுகிறது. இது புத்தகத்தை உறையிடும் செயன்முறையை உரிய முறையில் மேற்கொள்வதற்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், புத்தக அட்டையில் இடப்படும் விசேட பாதுகாப்பு கூறு காரணமாக, புத்தகங்களுக்கு மேலதிக பாதுகாப்பையும் வழங்குகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT