Saturday, April 27, 2024
Home » நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை

நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை

- போக்குவரத்து, குடிநீர் வசதி தொடர்பிலும் கலந்துரையாடல்

by Prashahini
February 21, 2024 11:56 am 0 comment

நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல், உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நயினாதீவில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடலின்போது கிராம மக்களால் எடுத்துக்கூறப்பட்டது.

பாடசாலைகளுக்கான தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் இதன் போது பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தீர்வு காண்பதற்கான திட்டவரைபை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார். நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இயற்கை வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

மக்களுடனான கலந்துரையாடலின் பின்னர் நயினாதீவு அமுதசுரபி அன்னதான மண்டப நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவிலும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் கலத்துகொண்டனர்.

அதனை அடுத்து தீவிலுள்ள ஏனைய மதவழிபாட்டுத்தளங்களுக்கும் சென்று மதத்தலைவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT