Thursday, May 9, 2024
Home » யாழ். போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடுதிரை

யாழ். போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடுதிரை

by Prashahini
February 16, 2024 4:58 pm 0 comment

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு டிஜிட்டல் தொடுதிரை இன்று (16) திறந்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இடங்களை தேடி அலையும் நிலையினை மாற்றும் நோக்கத்தோடு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் இவ் டிஜிட்டல் தொடுதிரை இன்று மதியம் 2.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது

இவ் டிஜிட்டல் தொடுதிரையில் பொதுமக்கள் வைத்தியசாலை தொடர்பான தவல்கள் அனைத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இத்தொடுதிரை வைத்தியசாலையில் ஏழு இடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT