Saturday, April 27, 2024
Home » கொழும்பில் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு

கொழும்பில் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

by Gayan Abeykoon
February 15, 2024 10:53 am 0 comment

கொழும்பிலுள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்கள், நீர்  நிலைகளில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார, பொல்கொட ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பது தொடர்பான காணொளி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

பொல்கொட ஆறு முதலைகளின் வாழ்விடமாக உள்ளது. கொழும்பிலுள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் நீரோடைகளில் பெருமளவிலான முதலைகள் வாழலாம். அதன்படி, தியவன்னாவ, போல்கொட ஏரி தெற்கு மற்றும் களனி கங்கை ஆகியவை முதலைகளின் வாழ்விடங்களாகக் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த நீரோடைகளில் நடந்து செல்லும் போது மக்கள் மிகவும் அவதானமாகவும் இருக்குமாறும் பணிப்பாளர் நாயகம் கேட்டுள்ளார்.

நாம் அவற்றை அகற்றினாலும், அவை மீண்டும் அதே வாழ்விடத்திற்கு வருகின்றன. முதலைகளை அவற்றின் வாழ்விடத்திலிருந்து அகற்றுவது சரியான செயல் அல்ல,” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT